Saturday, 28 May 2011

பதினான்காம் பாடல்

வந்திப்பவர் உன்னை வானவர் தானவரானவர்கள் !

சிந்திப் பவர்னல் திசை முகர் நாரணர் சிந்தையுள்ளே !

பந்திப் பவரழி யாபரமானந்தர் பாரில் உன்னைச் !

சந்திப்பவர் கெலிதா மெம்பிரா ட்டினின் தண்ணளியே !

<பொருள் >

எம் தாயே ! நின்னை வணங்குபவர்கள் வானவரும் அசுரர்களும் ஆவார்கள் .
உன்னை மனதுள் தியானிப்பவர்கள் நல்லவரான நான் முகனும் 
நாராயணரும் ஆவர்கள் . தம் மனதுள் அன்பினால் பிணித்து இன்பம் 
அடைபவர் அழியாத பரமானந்தா  வடிவுடையா  சிவ பெருமான் 
ஆவார் . இத்துணை சிறப்பும் கொண்ட நின் திருவருள் . உலகத்தில் 
நின்னை  தரிசிப்பவர்க்கு எளிதாகின்றது !
இது என்ன வியப்பு !

Sunday, 22 May 2011

பதிமூன்றாம் பாடல் ~~~~~

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் !

காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு !

மூத்தவளே என்றும்  மூவா முகுந்தற்கு இளையவளே !

மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே !

<பொருள் >

உலகங்கள் பதி நான்கையும் ஈன்றவளே !அருள் கொண்டு ஈன்ற அந்த பதினான்கு உலகங்களையும் காத்தவளே !பின் அவற்றை மறைத்து வைப்பவளே !நஞ்சின் கருமையை கழுத்தில் உடைய சிவபெருமானுக்கு முன் தோன்றிய தத்துவமாய் உள்ளவளே !என்றும் முதுமை அடையாத திருமாலுக்கு தங்கையே !பெருந்தவதினை உடையவளே !நான் உன்னை அல்லாது வேறு கடவுளை வழிபடுவது முறையாகுமா ?

பனிரெண்டாம் பாடல்

கண்ணியதுன் புகழ் கற்பதுநாமம் கசிந்துபத்தி !

பண்ணியந்துன் திரு பாதாம் புயத்தில் பகலிரவா!

நண்ணியதுன்னை நயந்தோர் அவயத்து நான் முன் செய்த!

புண்ணியமே எண்ணமே புவி ஏழையும் பூத்தவளே!

<பொருள் >
எம் அன்னையே உலகங்கள் ஏழையும் படைத்தவளே ! நான் எபோதும் நினைப்பது உன் புகழை ! பலகாலும் பயின்று உணர்வது உன் திருபெயரை!
மனம் கசிந்து பக்தி பண்ணியது உன் திருவடி தாமரைகளில் !
பகல் இரவாக சென்றடைய நின் அன்பரின் கூட்டத்தை !இவளவுக்கும் 
நான் செய்த புண்ணியம் யாது? 


Tuesday, 10 May 2011

பதினோராம் பாடல்

ஆனந்த மாயின் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் !

வானந்த மான வடிவுடையான் மறை நான் கினுக்கும் !

தானந்த மான சரணார விந்தம் தவளநிறக் !

கானந்த ஆடரங்கா எம்பிரான் முடி கண்ணியதே !

<பொருள் >

ஆனந்த வடிவம் ஆகி , என் அறிவாகி , நிறைந்த அமுதம் போன்றவழகி .
வான் ,பூமி, போன்ற ஐயும் பூதங்களுக்கும் தன் வடிவாக கொண்டவள் அபிராமி , அந்த அற்புத அன்னை நான்கு மறைகளுக்கும் , முடிவாக நிற்கும் 
திருவடிகள் , வெண்மையான நிறம் கொண்ட தன் ஆடும் இடமாய் கொண்ட 
என் சிவபெருமானின் முடிக்கு மாலையாய் விளங்குகின்றன ! 

பத்தாம் பாடல்


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைபதுன்னை !

என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் ஏழு தாமரையின் !

ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து !

அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே !

<பொருள் >

எழுத படாத வேதத்தில் பொருந்திய அறிய பொருளே !
அருள் வடிவாக விளங்குபவளே ! உமையே ! முன்காலத்தில் இமய
 மலையில் பிறந்தருளிய பார்வதியே ! அழியாத முக்தி இன்பமே !நான் 
, நின்றவாறும் , நடந்தவாறும் படுத்தவாரும் துதிப்பது நின்னையே !

Wednesday, 4 May 2011

ஒன்பதாம் பாடல் ....

கருத்தன எந்தைதன் கண்ணன வண்ண கனக வெற்பில்!
 .
பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்!

திருத்தன பாரமும் ஆரமும் செங்கை சிலையும் அம்பும்!

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்த என் முனிற்கவே !

<பொருள் >
என் அன்னையே ! எம் தந்தை சிவபெருமானின் உள்ளத்தில் உள்ளனவும் .
அவர்தம் கண்களில் உள்ளனவும் . அழுத சம்பதருக்கு பால் தந்த அருள் வாய்ந்த அழகிய . முத்து மாலை அணிந்த மார்பும் . சிவந்த திருக்கை இடத்தில் உள்ள கரும்பு வில்லும் மலர் அம்பும் . மயிலிறகின் அடியை போன்ற பற்களும் ஆகிய இவற்றை எல்லாம் உடைய நின் முழு திருகோலதுடன் வந்து என்முன் நின்று தரிசனம் அளித்தருளுக ...

Monday, 2 May 2011

எட்டாம் பாடல் .....

சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் !

வந்தரி சிந்துர வண்ணத்தினால் மகிடன் தலைமேல் !

அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்!

கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என்கருதனவே !

<பொருள் >

பேரழகி , எம் தந்தையான சிவபெருமானின் தேவி , என் பாசமான 
விலங்கை எல்லாம் தன்னிடம் உள்ள அருளால் எழுந்தருளி வந்து 
அழிக்கும் சிந்துரம் போன்ற சிவந்த நிறம் உடையவள் , மகிஷாசுரனின் 
தலை மீது நிற்கும் அந்தரி ,நீல நிறம் கொண்டவள் , எக்காலத்தும் 
அழிவில்லா கன்னி தன்மை கொண்டவள் , நான்முகனின் கபாலத்தை 
தங்கிய திருகை கொண்டவள் ஆகிய அபிராமி அம்மையின் தாமரை 
மலர் போன்ற திருவடிகள் என்றும் என் உள்ளத்தில் உள்ளன !  

Sunday, 1 May 2011

ஏழாம் பாடல்

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர் !

கதியொரு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் !

மதியொரு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் !

துதியொரு சேவடியாய் சிந்துராரண சுந்தரியே !  

<பொருள் >
தாமரையில் வீற்று இருக்கின்ற நான் முகனும் , பிறை சந்திரனை 
அணிந்த தலையை  உடைய நின் கணவனான சிவனும் ,திருமாலும் 
வணங்கி எபோதும் துதிக்கின்ற சிவந்த திருவடிகளை உடையவளே ,
செந்நிற திலகம் அணிந்த நெற்றியை உடையவளே !

தயிரில் சுழல்கின்ற மத்தினை போல் , பிறப்பு இறப்பு இடையே 
சுழலும் என் உயிர் , தளராத படி ஒரு நல்ல கதியை அடையுமாறு 
நீ.... திருஉள்ளம் கொள்ள வேண்டும் !.