Friday 29 April 2011

ஐந்தாம் பாடல்.....


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்!

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்!

அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்!

திருந்திய சுந்தரி யந்தரி பாதமென் சென்னியதே ! 

<பொருள் >
பொருந்திய திருபுறங்களின் தலைவி . செப்பாய் உவமையாக கூறும் 
இரு கொங்கைகளின் சுமையினாலே வருந்திய வஞ்சி கொடி போன்ற 
இடையை உடைய மனோன்மணி . நீண்ட சடையை உடைய 
சிவபெருமான் முன்காலத்தே அருந்திய நஞ்சினை கழுத்தில் 
நிறுத்தி அமுதம் ஆக்கிய அன்னை . தாமரை மலர் மீது 
வீற்று இருக்கின்ற பேரழகி , பிரகாச வடிவுடையாள் 
ஆன அபிராமி அம்மையின் திருவடிகள் என் மீது உள்ளனவாகும் !