Friday 17 June 2011

பதினெட்டாம் பாடல் ~~~~~

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்து இருக்கும் !

செவியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே !

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதம் ஆகிவந்து !

வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே !


<பொருள்>
அன்னையே !நீ கவர்ந்து கொண்ட இடபாகத்தை உடைய சிவபெருமானும் நீயும் கூடி மகிழ்து இருக்கும் நிலையில் உள்ள கோலமும் , உங்கள் திருமண கோலமும் , என் உள்ளத்தில் இருந்த அகந்தையை போக்கி என்ன உள்ளதை ஆண்ட உன் பொலிவுடைய  பொற்பாதம் எழுந்து வந்து 
கூற்றுவன் என்னை கவர வரும்போது அவன் காண வெளிவந்து நின்று ,
அவனால் வரும் துன்பத்தை போக்கி அருள வேண்டும் ! 

பதினேழாம் பாடல் ~~~~

அதிசய மான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் !

துதிசய வானன சுந்தர வள்ளி துணை இறுதி !

பதி சயமானது அபசய மாகமுன் பார்த்தவர்தம் !

மதிசய மாகவன்றோ வாம பாகத்தை வவ்வியதே !

<பொருள்>
அதிசயமான வடிவுடைய அபிராமி அம்மை , தாமரை மலர்கள் எல்லாம் துதிக்கும் , வெற்றி திருமுகமுடைய அழகு கொடியாவாள்,இரதியின் கணவனான காமன் பெற்ற வெற்றி தோல்வி அடையுமாறு, நெற்றி கண்ணால் சுட்டெரித்தவர் சிவபெருமான் . அத்தகையவரின் திருவுள்ளம் தன் வெற்றியாக மாற , அதனால் அன்றோ அம்மை ஆனவள் சிவனின் இடபாகம் பெற்றாள்.!