Friday 29 July 2011

பாடல் முப்பது இரண்டு ~~~~~~~~~~~~

ஆசை கடலில் அகப்பட்ட அருளற்ற அந்தகன் கை !

பாசத்தில் அல்லற்படவிருந்தேனை நின் பாதம் என்னும் !

வாச கமலம் தலைமேல் வலியா வைத்து ஆண்டு கொண்ட!

நேசத்தை என்சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே !

<பொருள்>
என் இறைவனான சிவபெருமானின் இடபாகத்தில் எழுந்தருளி இருக்கும் 
நல்ல அணிகளை அணிந்த தாயே ! ஆசை என்ற கரை இல்லாத கடலில் துரும்பு போல அகப்பட்டு . அதன் காரணமாக இறப்பு உண்டாகும் காலத்தில் , அருள் இல்லாத எமனின் கைபாகத்தில் அகப்பட்டு துன்ப பட 
இருந்தேன் . இத்தகைய என்னை நின் திருவடி என்ற நறுமணம் உடைய 
தாமரையை வலிய என் தலை மீது சூட்டி அருளி என்னை ஆட்கொண்ட பெருங்கருணையை என்னவென்று சொல்வேன் !!!!!!?