Tuesday 25 December 2012

நாற்பத்து ஒன்றாம் பாடல் ~~~


புண்ணியம் செய்தனமே மனமே புது பூங்குவளை!

கண்ணியுன்செய கணவரும் கூடி நங் காரணத்தால்!

நண்ணி இங்கே வந்து தம்மடியார்கள் நடுவிருக்க!

பண்ணி நன்சென்னியின் மேற் பத்மபாதம் பதித்திடவே !!







                  ~~~~~~~~~~~~~~~~~~பொருள்~~~~~~~~~~~~~~~~~~ 

என் உள்ளமே ! புதியதாய் மலர்ந்த பூகுவளை போன்ற கண்களை 
உடைய அபிராமி அன்னையும் அபெருமாட்டியின் சிவந்த நிறம் 
கொண்ட கணவரும் கூடி நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் ,நாம் இருக்கும் இடத்தை அடைந்து , நம்மை தம் அடியார்கள் இருக்கும் இடத்தில் இருக்குமாறு செய்து ,நம் தலைமீது 
தம் திருவடியை பதிப்பதற்கு தக்கவாறு நல்ல புண்ணியங்களை நாம் 
முன்பு செய்துள்ளோம் ~~~

Monday 24 December 2012

நாற்பதாம் பாடல்~~~

வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சி பேணுதர்க்கெண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியன் அல்லாத கன்னியை காணும் அன்பு பூணுதர்க்கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே!!!!!




ஒளியுடைய நெற்றி பொருந்திய கண்ணை உடையவளை தேவர்கள் யாவரும் வந்து வணங்கி விரும்பி வழிபடுவதற்கு நினைத்த எம்பெருமாட்டியை ,அறியாமை உடைய உள்ளத்தில் காண்பதற்கு நெருங்கியவள் அல்லாத கன்னியை, தரிசித்து அன்பு கொள்வதற்கு உண்டான எண்ணம்,முன்பிறவியில் நான் செய்த புண்ணியம் அன்றோ ~~~~~~