Sunday 26 February 2012

முப்பத்து எட்டாம் பாடல் ~~~~~





பவள கோடியில் பழுத்த செவ்வாயும்  பனிமுறுவல் !

தவளத் திருநகையும் துணையாய் எங்கள் சங்கரனை !
துவள பொருதுதுடி இடை சாய்க்கும் துணை முலையாள்!
அவளை பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே!


<பொருள்>



எல்லா போகங்களிலும் சிறந்த இந்திரா போகங்களை அடைந்து வானவர்க்கு அரசனாய் அமராவதியை 
ஆளும் பொருட்டு . பவளம் போன்ற கனிந்த செவ்வாயும் குளுமையான முறுவலும் வெண்மையான பற்களும் , இறைவரான சிவபெருமானை 
நெகிழுமாறு மோதி 
உடுக்கை போன்ற இடையை தளர செய்யும் இரண்டு கொங்கைகளை உடைய அபிராமி அன்னையை வணங்குவீராக ..


பாடல் முப்பது ஏழு ...



கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலமன்ன!
 
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விடவரவின்!
 
பைக்கே அணிவது பன்மணி கோவையும் பட்டுமெட்டு!

திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே ..!

<பொருள் >

எட்டு திசையையுமே தன ஆடையாய் அணிந்து கொண்ட இறைவனின் இடபாகத்தை சேர்ந்து எழுந்தருளியுள்ள தாய் அபிராமி .
தன் கையில் அணிந்து இருப்பவை கரும்பும் மலர்களும் ஆகும் . தாமரை மலர்போன்ற உடலில் அணிவது தூய வெண்மையான 
முத்து மாலை . நஞ்சை உடைய பாம்பின் படத்தை போன்று இடையில் அணிந்து இருப்பது பல மணிகள் பதித்த கோவையும் 
பட்டும் ஆகும் ~~~~