Tuesday, 10 May 2011

பதினோராம் பாடல்

ஆனந்த மாயின் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் !

வானந்த மான வடிவுடையான் மறை நான் கினுக்கும் !

தானந்த மான சரணார விந்தம் தவளநிறக் !

கானந்த ஆடரங்கா எம்பிரான் முடி கண்ணியதே !

<பொருள் >

ஆனந்த வடிவம் ஆகி , என் அறிவாகி , நிறைந்த அமுதம் போன்றவழகி .
வான் ,பூமி, போன்ற ஐயும் பூதங்களுக்கும் தன் வடிவாக கொண்டவள் அபிராமி , அந்த அற்புத அன்னை நான்கு மறைகளுக்கும் , முடிவாக நிற்கும் 
திருவடிகள் , வெண்மையான நிறம் கொண்ட தன் ஆடும் இடமாய் கொண்ட 
என் சிவபெருமானின் முடிக்கு மாலையாய் விளங்குகின்றன ! 

பத்தாம் பாடல்


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைபதுன்னை !

என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் ஏழு தாமரையின் !

ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து !

அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே !

<பொருள் >

எழுத படாத வேதத்தில் பொருந்திய அறிய பொருளே !
அருள் வடிவாக விளங்குபவளே ! உமையே ! முன்காலத்தில் இமய
 மலையில் பிறந்தருளிய பார்வதியே ! அழியாத முக்தி இன்பமே !நான் 
, நின்றவாறும் , நடந்தவாறும் படுத்தவாரும் துதிப்பது நின்னையே !

Wednesday, 4 May 2011

ஒன்பதாம் பாடல் ....

கருத்தன எந்தைதன் கண்ணன வண்ண கனக வெற்பில்!
 .
பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்!

திருத்தன பாரமும் ஆரமும் செங்கை சிலையும் அம்பும்!

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்த என் முனிற்கவே !

<பொருள் >
என் அன்னையே ! எம் தந்தை சிவபெருமானின் உள்ளத்தில் உள்ளனவும் .
அவர்தம் கண்களில் உள்ளனவும் . அழுத சம்பதருக்கு பால் தந்த அருள் வாய்ந்த அழகிய . முத்து மாலை அணிந்த மார்பும் . சிவந்த திருக்கை இடத்தில் உள்ள கரும்பு வில்லும் மலர் அம்பும் . மயிலிறகின் அடியை போன்ற பற்களும் ஆகிய இவற்றை எல்லாம் உடைய நின் முழு திருகோலதுடன் வந்து என்முன் நின்று தரிசனம் அளித்தருளுக ...

Monday, 2 May 2011

எட்டாம் பாடல் .....

சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் !

வந்தரி சிந்துர வண்ணத்தினால் மகிடன் தலைமேல் !

அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்!

கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என்கருதனவே !

<பொருள் >

பேரழகி , எம் தந்தையான சிவபெருமானின் தேவி , என் பாசமான 
விலங்கை எல்லாம் தன்னிடம் உள்ள அருளால் எழுந்தருளி வந்து 
அழிக்கும் சிந்துரம் போன்ற சிவந்த நிறம் உடையவள் , மகிஷாசுரனின் 
தலை மீது நிற்கும் அந்தரி ,நீல நிறம் கொண்டவள் , எக்காலத்தும் 
அழிவில்லா கன்னி தன்மை கொண்டவள் , நான்முகனின் கபாலத்தை 
தங்கிய திருகை கொண்டவள் ஆகிய அபிராமி அம்மையின் தாமரை 
மலர் போன்ற திருவடிகள் என்றும் என் உள்ளத்தில் உள்ளன !  

Sunday, 1 May 2011

ஏழாம் பாடல்

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர் !

கதியொரு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் !

மதியொரு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் !

துதியொரு சேவடியாய் சிந்துராரண சுந்தரியே !  

<பொருள் >
தாமரையில் வீற்று இருக்கின்ற நான் முகனும் , பிறை சந்திரனை 
அணிந்த தலையை  உடைய நின் கணவனான சிவனும் ,திருமாலும் 
வணங்கி எபோதும் துதிக்கின்ற சிவந்த திருவடிகளை உடையவளே ,
செந்நிற திலகம் அணிந்த நெற்றியை உடையவளே !

தயிரில் சுழல்கின்ற மத்தினை போல் , பிறப்பு இறப்பு இடையே 
சுழலும் என் உயிர் , தளராத படி ஒரு நல்ல கதியை அடையுமாறு 
நீ.... திருஉள்ளம் கொள்ள வேண்டும் !. 

Saturday, 30 April 2011

ஆறாம் பாடல்

சென்னியது உன்பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே !

மன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே!

முன்னிய நின்னடி யாருடன் கூடி முறைமுறையே !

பன்னிய தென்று முன் தன்பரமாகம பத்ததியே !

பொருள் 

செந்நிறமான திருமேனி உடைய பெருமாட்டியே ! அடியேனின் தலை மீது  பொருந்தி இருப்பது நின் அழகிய திருவடி தாமரை மலர் !
என மனதுள் பொருந்தி இருப்பது உன் தெய்வ தன்மை பொருந்திய மந்திரம் 
உன்னையே தியானம் செய்து வாழும் அடியாருடன் !
ஒன்று கூடி முறை முறையாக பாராயணம் செய்பவை நின் மேலான 
ஆகம நெறிகளாகும்!....

Friday, 29 April 2011

ஐந்தாம் பாடல்.....


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்!

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்!

அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்!

திருந்திய சுந்தரி யந்தரி பாதமென் சென்னியதே ! 

<பொருள் >
பொருந்திய திருபுறங்களின் தலைவி . செப்பாய் உவமையாக கூறும் 
இரு கொங்கைகளின் சுமையினாலே வருந்திய வஞ்சி கொடி போன்ற 
இடையை உடைய மனோன்மணி . நீண்ட சடையை உடைய 
சிவபெருமான் முன்காலத்தே அருந்திய நஞ்சினை கழுத்தில் 
நிறுத்தி அமுதம் ஆக்கிய அன்னை . தாமரை மலர் மீது 
வீற்று இருக்கின்ற பேரழகி , பிரகாச வடிவுடையாள் 
ஆன அபிராமி அம்மையின் திருவடிகள் என் மீது உள்ளனவாகும் !