Sunday, 17 July 2011

இருபத்தி ஒன்பதாம் பாடல் ~~~~

சித்தியும் சித்தி தரும் தெய்வமாகி திகழும் பரா !


சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவமுயல்வார் !

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைதெழுந்த!

புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே ! 

.                                                                         <பொருள் >


எட்டு வகை பட்ட சித்தியும் அவற்றினை அளிக்கும் தெய்வமாகி நிற்கும் 
பராசக்தியும் . ஆகி ..அந்த பராசக்தி தன்னிடம் பொருந்த செய்துள்ள சிவமும் 
தவத்தை இயற்றுபவர் அடையும் முக்தி இன்பமும் , முக்தியை பெறுவதற்கு 
மூலமும் , அந்த முலத்தை அறியும் அறிவும் . இவை எல்லாமுமாக இருப்பவள் 
அறிவில் நின்று பாதுகாக்கும் திருப்புற சுந்தரி நாம் எல்லோரையும் காக்கட்டும் ..




Thursday, 14 July 2011

இருபத்தி எட்டாம் பாடல்~~~~~

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் !


புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர்த்தாள் !

அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியவரசும் !

செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே ! 
<பொருள் >

காவியத்திலும் கவிதையிலும் வரும்,, சொல்லும் அதன் பொருளும் போன்று 
என்றும் இணைபிரியாது ஆனந்த கூத்து இயற்றும் உன் துணைவனான சிவபெருமானுடன் ,
பொருந்தியுள்ள நறுமணம் உடைய பூங்கொடி போன்றவளே ,!  புதிய மலரை போன்று 
எபோதும் உள்ள உன் திருவடிகளை அல்லும் பகலும் தொழும் அடியவர்களுக்கு ,
பகைவர்களால் அழிவு வராத அரச செல்வமும் பயன் தரும் முறையில் செல்லும் 
தவ வாழ்வும் இறுதியில் சிவலோக பதவியும் கிடைக்க பெறும்!





Saturday, 2 July 2011

இருபத்தி ஏழாம் பாடல் ~~~~~

உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகுமன்பு!

படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணிஎனக்கே !

அடைத்தனை நெஞ்சதழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்!

துடைத்தனை சுந்தரி நின்னருளேது என்று சொல்லுவதே !

<பொருள்>

பேரழகு உடையவளே ! வஞ்சகமாக யான் அறியாமல் என்னை துன்புறுத்தும் 
பிறவி குவியலை அழித்தாய் . அதற்ககு முன் உள்ளம் உருகும் அன்பை அடியேன் பெறும்படி செய்தாய் ! நின் தாமரை மலர் போன்ற திருவடிகளை 
எளியேன் சூடி கொள்ளும் படியான பணியை எனக்கு அருளினாய் 
என் மனதில் உள்ள அழுக்கை எல்லாம் நின் அருள் என்ற தூய்மையான
 நீரால் கழுவினாய் தூய்மை செய்தாய் ! இவளவுக்கும் காரணமான உனதருளை என்னவென்று கூறுவது!.................






Tuesday, 28 June 2011

இருபத்தி ஆறாம் பாடல் ~~~~~

ஏந்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் !

காத்தும்! அழித்தும் , திரிபவராம் கமழ் பூங்கடம்பு !

சாத்தும் குழலனங்கே மணநாறு நின்தாளிணைக்கே என் !

நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே !

<பொருள்>

நறுமணம் கமழும் கடம்ப நறுமண மலர்களை அணியும் கூந்தலையுடைய 
தெய்வ பெண்ணே ! நின்னை துதிக்கும் அடியவர் பதினான்கு படைத்தும்
காத்தும் அழித்தும் விளங்கும் மும்மூர்த்திகலாவர் . அங்ஙனமாக மணம்
வீசும் நின் இரண்டு திருவடிகளுக்கு எளியவனான என் நாவில் தங்கிய 
பொலிவற்ற சொற்கள் ஏற்படுயதாக செயல் சிரித்தற்கு இடமாய் உள்ளது !

Thursday, 23 June 2011

இருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~

பின்னே திரிந்துன் அடியாரை பேணி பிறப்பறுக்க !

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதன் மூவருக்கும் !

அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே !

என்னே இனியுன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே !

<பொருள்>

முதற்கடவுளான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே !உலகத்து உயிர்களின் 
நன்மையின் பொருட்டு அபிராமி எனப் போற்ற பெறுகின்ற அருமருந்தாய் 
விளங்குபவளே !உன்னை நான் மறவாமல் என்றும் துதிப்பேன் !
இனிமேல் எனக்கு என்ன கவலை ? இத்தகைய பேரு எனக்கு வாய்த்ததிற்கான காரணம் யாது ? நின்னடியாரின் பின்னால் திரிந்து 
அவர்களை போற்றி பிறப்பை அறுப்பதற்கு தக்கபடி முன் பிறவியில் 
தவத்தை ஆற்றி உள்ளேன்!......



இருபத்தி நான்காம் பாடல் ~~~~~~

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த !
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதாவர்க்கு !

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே !

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே !

<பொருள்>

மாணிக்கம் போன்றவளே ! மணியில் பொருந்திய ஒளி போன்றவளே !
விளங்கும் உயர்ந்த மணிகளால் இயற்ற பெற்ற அணி போன்றவளே !
அணிந்து கொள்ளும் அணிகளுக்கு அழகாக விளங்குபவளே !
நின்னை அணுகாதர்வற்கு நோய் போன்றவளே !பிறவி என்ற நோய்க்கு மருந்தாக விளங்குபவளே !தேவர்க்கு பெருவிருந்தாக விளங்குபவளே !
நின் தாமரை பாதங்களை வணங்கிய பின் வேறு ஒருவரையும் வணங்க மாட்டேன் !


Wednesday, 22 June 2011

இருபத்தி மூன்றாம் பாடல் ~~~~~

கொள்ளேன் மனதினில் கோலம் அல்லது என்பர் கூட்டந்தன்னை !

விள்ளேன் பராமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு !

குள்ளே அனைதினிர்க்கும் புறம்பே உள்ளதே விளைந்த!

கள்ளே களிக்கும் கலியே அளியே என் கண்மணியே !

<பொருள்> 

பரந்த மூவுலகங்களுக்கு உள்ளும் அந்தர்யாமியாய் உள்ள அன்னையே !
எல்லா உலகங்கங்களுக்கும் அப்பாற்பட்டு விளங்குபவளே !
உள்ளத்தில் இன்பத்தை விளைவிக்கும் கள்போன்றவளே !
அக்கள்ளால் களிக்கும் களிப்பை விளங்குபவளே !எளியவனான என் கண்ணில் உள்ள மணி போன்றவளே ! யான் நின்னையே அல்லாமல் 
வேறு உருவத்தை தியான பொருளாக மனதில் கொள்ள மாட்டேன் !உன் 
அன்பர்கள் கூட்டத்தை என்றும் பிரிந்து நில்லேன் .... பிற சமயங்களை விரும்ப மாட்டேன் !