Saturday, 18 February 2012

பாடல் முப்பது ஆறு ~~~~~~~~~~


பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும் !

மருளே ,மருளில் வரும் தொருளே . என்மனத்து வஞ்சத்து இருளேதும் !

இன்றி ஒளிவெளி யாகி இருக்கும் முன் தன் அருளே தனிகின்றி லேனம்பு !

யாதனத்து அம்பிகையே !!!!!


                                                                       <பொருள்>


செல்வ பொருளே , அசெல்வதால் நிறைவேறும் இன்பமே ! அறிய இன்பங்களை 
துய்ப்பதால் !வரும் மயக்கமே மயக்கத்தின் முடிவில் உண்டாகும் தெளிந்த அறிவே . தாமரையான இருக்கையில் அமர்ந்தவளே , எளியேன் மனதில் 
மாயையின் .இருள் சிறிதும் இன்றி , நீங்கிட சுடர் வீசும் பெருவெளியாய் 
விளங்கும் நின் திருவருள் எத்தகையது என்று நான் அறியேன் !!! 

Wednesday, 8 February 2012


பாடல் முப்பத்தைந்து ~~~~~


திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க !
எங்கட் கொரு தவம் எய்தியவா வெண்ணிறேந்தவிண்ணோர் !
தங்கட்கும் ஒரு தவம் எய்துமோ தர்ணகட் கடனுள் !
வெங்கட் பணியணை மேல் துயில் கூறும் விழுபொருளே !

                                                              <பொருள் >

  மிகுந்த அலைகளை உடைய பாற்கடலில் கொடிய கண்ணை உடைய 
ஆதி சேடன் பாம்பை பஞ்சணையாக கொண்டு அறிதுயில் கொள்ளும் பரம்பொருளே ! சிவபெருமானின் திருமுடியில் உள்ள பிறை சந்திரனின் 
அணிந்தவரின் மணம் கமழும் நின் சிறிய அடிகளை அடியவரான எம் 
தலையில் வைத்து அருள்வாய் ! இங்ஙனம் வைத்து நீ எந்கலூகு அருள 
யாம் செய்த ஒப்பற்ற தவம் தான் என்ன ? எண்ணிலா தேவர்களுக்கு கூட
இத்தவம் கிடைக்குமா என்பது ஐயமே !!!





Saturday, 30 July 2011

பாடல் முப்பத்து நான்கு ~~~~~~

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் !

தந்தே பரிவொடு தான்போ இருக்கும் சதுமுகமும் !

பைந்தேன் அலங்கல் பருமணி யாகமும் பாகமும்பொன் !

செந்தேன் மலரு மலர்கதிர் ஞ்சயிரும் திங்களுமே !

<பொருள்>
அபிராமி தன்னிடம் வந்து அடைக்கலம் அடையும் அடியவருக்கு 
பொன் உலகபதவியை அன்புடன் தருவாள் ,தந்து , தான் சென்று 
நான் முகனின் நான்கு முகங்களிலும் , மற்றும் பசிய தேன்சிந்தும் 
துளசிமாலை சூடிய கௌத்துவ மணி அணிந்த திருமாலின் மார்பிலும் 
சிவபெருமானின் இடபாகத்திலும் , செந்தேன் சிந்தும் தாமரை மலரிலும் 
பரந்த கதிரிகளையுடைய கதிரவனின் ஒலிகய்டையிலும் 
திங்களின் குளிர்ச்சியிலும் இருப்பாயாக ! 


பாடல் முப்பத்து மூன்று ~~~~~~

இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க !

அழைக்கும் பொழுது வந்து அஞ்சேல் என்பாய் அத்தர் சித்தமெல்லாம் !

குழைக்கும் களப குளிமுளையாமலை கோமளமே !

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே !

<பொருள்>
எம்பெருமானின் உள்ளமானதை உருக செய்யும் சந்தன கலவை பூச பெற்ற 
குவிந்த கொங்கைகளையுடைய யாமளை என்ற மென்மையானவளே !
விதித்த விதியின் படி கொள்ள வரும் எமன் எனை நடுங்க செய்து 
அழைக்கும் போது , நீ எழுந்தருளி , நீ அஞ்ச வேண்டா : என்று அருளுவாயாக ... நான் துன்பம் அடையும்போது வேறு எவரையும் நாடாமல் , தாயே ! என்று உன்னையே நாடி ஓடிவருகிறேன் !...



Friday, 29 July 2011

பாடல் முப்பது இரண்டு ~~~~~~~~~~~~

ஆசை கடலில் அகப்பட்ட அருளற்ற அந்தகன் கை !

பாசத்தில் அல்லற்படவிருந்தேனை நின் பாதம் என்னும் !

வாச கமலம் தலைமேல் வலியா வைத்து ஆண்டு கொண்ட!

நேசத்தை என்சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே !

<பொருள்>
என் இறைவனான சிவபெருமானின் இடபாகத்தில் எழுந்தருளி இருக்கும் 
நல்ல அணிகளை அணிந்த தாயே ! ஆசை என்ற கரை இல்லாத கடலில் துரும்பு போல அகப்பட்டு . அதன் காரணமாக இறப்பு உண்டாகும் காலத்தில் , அருள் இல்லாத எமனின் கைபாகத்தில் அகப்பட்டு துன்ப பட 
இருந்தேன் . இத்தகைய என்னை நின் திருவடி என்ற நறுமணம் உடைய 
தாமரையை வலிய என் தலை மீது சூட்டி அருளி என்னை ஆட்கொண்ட பெருங்கருணையை என்னவென்று சொல்வேன் !!!!!!?


Sunday, 24 July 2011

பாடல் முப்பத்து ஒன்று~~~~~

உமையும் உமையொரு பாகனுமே குருவில் வந்திங்கு !

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத் தாரினி எண்ணுதற்கு !

சமயங்களுமில்லை ஈன்றுடுப்பார் ஒரு தாயுமில்லை !

அமையு மமையுறு தோனியர் மேல் வைத்த ஆசையுமே !

< பொருள்>

     உமையும் அந்த உமையை இடபாகத்தில் கொண்ட சிவபெருமானும் ஒரே வடிவில் வந்து ஒன்றுக்கும் பற்று இல்லாத என்னை தன்னிடம் பற்று கொள்ளும்படி செய்து தடுத்தாட் கொண்டனர் . இனி நாம் போய் 
நற்கதி அடைவதற்கு வழி எது என்று ஆராய்வதற்கு சமையங்களும் இல்லை . நான் வீடு பேற்றை அடைய போவது உறுதி .
இனி என்னை ஈன்றெடுக்கும் தாயானவள் இல்லை ஆதலால் .
மூங்கில் போன்ற தோளை உடைய பெண்டிர்மீது வைக்கும் ஆசை இனி போதும் !

Wednesday, 20 July 2011

பாடல் முப்பது ~~~~~

அன்றே தடுத்தென்னை ஆண்டு கொண்டாய் கொண்ட 
                                                                    வென்கை !

நன்றே உனக்கினி நானென் செயினும் நடுகடனுள் !

சென்றே விழினும் கரையேற்று கை நின் திருவுளமே !

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே !
<பொருள் >
ஒருவடிவாய் விளங்குபவளே !பல வடிவங்களையும் விளங்குபவளே !
வடிவம் இல்லாத அருவமாய் விளங்குபவளே !என் அன்னையான உமையவளே !
முன்னர் ஒருநாள் எனை தடுதாட்கொண்டாய் ,அவ்வாறு தடுதட்கொண்டதை இல்லை என 
கூறுதல் நியாயமா உனக்கு ?இனி நான் என்ன செய்தாலும் , கடலின் நடுவில் போய் விழுந்தாலும் !
என் குற்றத்தை மறந்து என்னை கரை ஏற்றுதல் உன் திருவுள பாங்கை பொருத்ததாகும் !.....