Monday, 2 May 2011

எட்டாம் பாடல் .....

சுந்தரி எந்தை துணைவி என் பாச தொடரை எல்லாம் !

வந்தரி சிந்துர வண்ணத்தினால் மகிடன் தலைமேல் !

அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்!

கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என்கருதனவே !

<பொருள் >

பேரழகி , எம் தந்தையான சிவபெருமானின் தேவி , என் பாசமான 
விலங்கை எல்லாம் தன்னிடம் உள்ள அருளால் எழுந்தருளி வந்து 
அழிக்கும் சிந்துரம் போன்ற சிவந்த நிறம் உடையவள் , மகிஷாசுரனின் 
தலை மீது நிற்கும் அந்தரி ,நீல நிறம் கொண்டவள் , எக்காலத்தும் 
அழிவில்லா கன்னி தன்மை கொண்டவள் , நான்முகனின் கபாலத்தை 
தங்கிய திருகை கொண்டவள் ஆகிய அபிராமி அம்மையின் தாமரை 
மலர் போன்ற திருவடிகள் என்றும் என் உள்ளத்தில் உள்ளன !  

Sunday, 1 May 2011

ஏழாம் பாடல்

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர் !

கதியொரு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் !

மதியொரு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் !

துதியொரு சேவடியாய் சிந்துராரண சுந்தரியே !  

<பொருள் >
தாமரையில் வீற்று இருக்கின்ற நான் முகனும் , பிறை சந்திரனை 
அணிந்த தலையை  உடைய நின் கணவனான சிவனும் ,திருமாலும் 
வணங்கி எபோதும் துதிக்கின்ற சிவந்த திருவடிகளை உடையவளே ,
செந்நிற திலகம் அணிந்த நெற்றியை உடையவளே !

தயிரில் சுழல்கின்ற மத்தினை போல் , பிறப்பு இறப்பு இடையே 
சுழலும் என் உயிர் , தளராத படி ஒரு நல்ல கதியை அடையுமாறு 
நீ.... திருஉள்ளம் கொள்ள வேண்டும் !. 

Saturday, 30 April 2011

ஆறாம் பாடல்

சென்னியது உன்பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே !

மன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே!

முன்னிய நின்னடி யாருடன் கூடி முறைமுறையே !

பன்னிய தென்று முன் தன்பரமாகம பத்ததியே !

பொருள் 

செந்நிறமான திருமேனி உடைய பெருமாட்டியே ! அடியேனின் தலை மீது  பொருந்தி இருப்பது நின் அழகிய திருவடி தாமரை மலர் !
என மனதுள் பொருந்தி இருப்பது உன் தெய்வ தன்மை பொருந்திய மந்திரம் 
உன்னையே தியானம் செய்து வாழும் அடியாருடன் !
ஒன்று கூடி முறை முறையாக பாராயணம் செய்பவை நின் மேலான 
ஆகம நெறிகளாகும்!....

Friday, 29 April 2011

ஐந்தாம் பாடல்.....


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்!

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்!

அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்!

திருந்திய சுந்தரி யந்தரி பாதமென் சென்னியதே ! 

<பொருள் >
பொருந்திய திருபுறங்களின் தலைவி . செப்பாய் உவமையாக கூறும் 
இரு கொங்கைகளின் சுமையினாலே வருந்திய வஞ்சி கொடி போன்ற 
இடையை உடைய மனோன்மணி . நீண்ட சடையை உடைய 
சிவபெருமான் முன்காலத்தே அருந்திய நஞ்சினை கழுத்தில் 
நிறுத்தி அமுதம் ஆக்கிய அன்னை . தாமரை மலர் மீது 
வீற்று இருக்கின்ற பேரழகி , பிரகாச வடிவுடையாள் 
ஆன அபிராமி அம்மையின் திருவடிகள் என் மீது உள்ளனவாகும் !



Thursday, 28 April 2011

நான்காம் பாடல் ......

மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னி!

குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார்சடை மேல்!

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரிதியும் படைத்த!

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே !

பொருள் 

மனிதர் தேவர் இறவாத ஸ்ரிஞ்சீவி தன்மையுடைய முனிவர்கள் 
நெருங்கி வந்து தலை வணங்கும் சிவந்த அடிகளை உடைய 
கோமள வல்லியே ! கொன்றை மாலை சூடிய நீண்ட ஜடை மீது 
குளிர்ந்த இளம்பிறை சந்திரனும் , பாம்பும் , கங்கையும் ,
ஆகிய வற்றை அணிந்த தூயவரான சிவா பெருமானும் 
நீயும் . என் மனதுள் வந்து தங்கி அருள்வீராக !

Tuesday, 26 April 2011

மூன்றாம் பாடல்....

அறிந்தேன் எவரும் அறிய மறையை அறிந்து கொண்டு .

செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப.
 
பிறிந்தேன் என் அன்பர் பெருமை என்னாத கரும நெஞ்சால் .

மறிந்தே விழு நர குக்குற வாய மனிதரையே !

பொருள் 
திரு மகளாய் விளங்குபவளே ! வேறு எவரும் அறியாத ரகசியத்தை 
நான் அறிந்து கொண்டேன் . அங்ஙனம் நான் அறிந்து கொண்டு 
நின் திருவடியை அடைக்கலமாக நான் அடைந்தேன் .
நின் அடியாரின் பெருமையை அறிந்து கொள்ளாத
தீவினை உடைய உள்ளம் காரணமாக நரகத்தில் விழும் ,
தொடர்புடைய மனிதரை கண்டு அஞ்சி விலகினேன் !

Monday, 25 April 2011

பாடல் இரண்டு

துணையும் தொழு தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்!
 
பணையும் கொழுந்தும் பத்தி கொண்ட வெறும் பணிமலர்பூங்!
 
கணையும் கருப்புஞ் சிலையும் பாசாங்குசமும் கையில்!
 
அணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே !


திரிபுர சுந்தரி நான்கு கைகளிலும் குளிர்ந்த மலர் அம்புகளையும் 
கரும்பு வில்லையும் மென்மையான பாசம் அங்குசம் என்பனவற்றையும் 
கொண்டு விளங்குகிறாள் . அபெருமட்டியே எனக்கு துணையும் 
நான் வணங்கும் தெய்வமும் என்னை பெற்ற தாயும் 
வேதமான மரத்தின் கிளையாகவும் . அதன் தளிராகவும்
பொருந்திய வேராகவும் விளங்குகிறாள் . இதனை நான் அறிந்து கொண்டேன் !