Saturday, 2 July 2011

இருபத்தி ஏழாம் பாடல் ~~~~~

உடைத்தனை வஞ்ச பிறவியை உள்ளம் உருகுமன்பு!

படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணிஎனக்கே !

அடைத்தனை நெஞ்சதழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்!

துடைத்தனை சுந்தரி நின்னருளேது என்று சொல்லுவதே !

<பொருள்>

பேரழகு உடையவளே ! வஞ்சகமாக யான் அறியாமல் என்னை துன்புறுத்தும் 
பிறவி குவியலை அழித்தாய் . அதற்ககு முன் உள்ளம் உருகும் அன்பை அடியேன் பெறும்படி செய்தாய் ! நின் தாமரை மலர் போன்ற திருவடிகளை 
எளியேன் சூடி கொள்ளும் படியான பணியை எனக்கு அருளினாய் 
என் மனதில் உள்ள அழுக்கை எல்லாம் நின் அருள் என்ற தூய்மையான
 நீரால் கழுவினாய் தூய்மை செய்தாய் ! இவளவுக்கும் காரணமான உனதருளை என்னவென்று கூறுவது!.................






Tuesday, 28 June 2011

இருபத்தி ஆறாம் பாடல் ~~~~~

ஏந்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் !

காத்தும்! அழித்தும் , திரிபவராம் கமழ் பூங்கடம்பு !

சாத்தும் குழலனங்கே மணநாறு நின்தாளிணைக்கே என் !

நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே !

<பொருள்>

நறுமணம் கமழும் கடம்ப நறுமண மலர்களை அணியும் கூந்தலையுடைய 
தெய்வ பெண்ணே ! நின்னை துதிக்கும் அடியவர் பதினான்கு படைத்தும்
காத்தும் அழித்தும் விளங்கும் மும்மூர்த்திகலாவர் . அங்ஙனமாக மணம்
வீசும் நின் இரண்டு திருவடிகளுக்கு எளியவனான என் நாவில் தங்கிய 
பொலிவற்ற சொற்கள் ஏற்படுயதாக செயல் சிரித்தற்கு இடமாய் உள்ளது !

Thursday, 23 June 2011

இருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~

பின்னே திரிந்துன் அடியாரை பேணி பிறப்பறுக்க !

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதன் மூவருக்கும் !

அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே !

என்னே இனியுன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே !

<பொருள்>

முதற்கடவுளான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே !உலகத்து உயிர்களின் 
நன்மையின் பொருட்டு அபிராமி எனப் போற்ற பெறுகின்ற அருமருந்தாய் 
விளங்குபவளே !உன்னை நான் மறவாமல் என்றும் துதிப்பேன் !
இனிமேல் எனக்கு என்ன கவலை ? இத்தகைய பேரு எனக்கு வாய்த்ததிற்கான காரணம் யாது ? நின்னடியாரின் பின்னால் திரிந்து 
அவர்களை போற்றி பிறப்பை அறுப்பதற்கு தக்கபடி முன் பிறவியில் 
தவத்தை ஆற்றி உள்ளேன்!......



இருபத்தி நான்காம் பாடல் ~~~~~~

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த !
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதாவர்க்கு !

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே !

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே !

<பொருள்>

மாணிக்கம் போன்றவளே ! மணியில் பொருந்திய ஒளி போன்றவளே !
விளங்கும் உயர்ந்த மணிகளால் இயற்ற பெற்ற அணி போன்றவளே !
அணிந்து கொள்ளும் அணிகளுக்கு அழகாக விளங்குபவளே !
நின்னை அணுகாதர்வற்கு நோய் போன்றவளே !பிறவி என்ற நோய்க்கு மருந்தாக விளங்குபவளே !தேவர்க்கு பெருவிருந்தாக விளங்குபவளே !
நின் தாமரை பாதங்களை வணங்கிய பின் வேறு ஒருவரையும் வணங்க மாட்டேன் !


Wednesday, 22 June 2011

இருபத்தி மூன்றாம் பாடல் ~~~~~

கொள்ளேன் மனதினில் கோலம் அல்லது என்பர் கூட்டந்தன்னை !

விள்ளேன் பராமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு !

குள்ளே அனைதினிர்க்கும் புறம்பே உள்ளதே விளைந்த!

கள்ளே களிக்கும் கலியே அளியே என் கண்மணியே !

<பொருள்> 

பரந்த மூவுலகங்களுக்கு உள்ளும் அந்தர்யாமியாய் உள்ள அன்னையே !
எல்லா உலகங்கங்களுக்கும் அப்பாற்பட்டு விளங்குபவளே !
உள்ளத்தில் இன்பத்தை விளைவிக்கும் கள்போன்றவளே !
அக்கள்ளால் களிக்கும் களிப்பை விளங்குபவளே !எளியவனான என் கண்ணில் உள்ள மணி போன்றவளே ! யான் நின்னையே அல்லாமல் 
வேறு உருவத்தை தியான பொருளாக மனதில் கொள்ள மாட்டேன் !உன் 
அன்பர்கள் கூட்டத்தை என்றும் பிரிந்து நில்லேன் .... பிற சமயங்களை விரும்ப மாட்டேன் !

கொடியே இளவஞ்சி கொம்பே எனக்கு வம்பேபழுத்த  !

படியே மறையின் பரிமளமே பனிமால் இமய !

பிடியே பிரமன் முதலாய தேவரைப்  பெற்ற அம்மே !

அடியேனி றந்து இங்கினிப் பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே!

<பொருள்>

பொன்கொடி போன்றவளே ! இளைய வஞ்சி கொம்பு போன்றவளே !
தகுதி இல்லாத எனக்கு தானே வந்து அருள் அளித்த கனியே !
வேதமான மலரில் பரவிய மணம் போல விளங்குபவளே !
பனியை உடைய பெரிய இமய மலையில் தோன்றிய பிடி போன்றவளே !
நான் முகன் முதலிய தேவரை பெற்றெடுத்த தாயே !அடியவன் இவ்வுலகத்தில் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே !

Tuesday, 21 June 2011

இருபத்தி ஒன்றாம் பாடல் ~~~~~~


மங்கலை செங்கலை சம்முலையால் மலை யால்வருண !

சங்கலை செங்கை சகல கலாமயில் தாவு கங்கை !

பொங்கலை தாங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்!

பிங்கலை நீலி செய்யாள் வெளி யால்பசும் பெண்கொடியே !

<பொருள்>
அபிராமி மங்கள் வடிவுடையவள் செம்மையான குடம் போன்ற கொங்கைகள் உடையவள் !மலையின் மகள் !பல வண்ணங்கள் உடைய வளையல் அணிந்தவள் ; எல்லா கலைகளுக்கும் தலைவியான மயில் போன்றவள் !
பாயும் கங்கையில் பெருகும் அலைகள் அமைதியாய் தூங்க புரிந்த ,
சடையுடைய சிவபெருமானின் ஒரு பக்கத்தை தனக்கே உரியதாய் கொண்டு 
ஆள்கின்ற உரிமை உடையவள் . பொன்னிறம் வாய்க்க பெற்றவள் 
நீல நிறம் உற்றவள் . வெண்மை நிறம் கொண்டவள் . பசுமையான கொடி போன்றவள் ...