Sunday 1 May 2011

ஏழாம் பாடல்

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர் !

கதியொரு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் !

மதியொரு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் !

துதியொரு சேவடியாய் சிந்துராரண சுந்தரியே !  

<பொருள் >
தாமரையில் வீற்று இருக்கின்ற நான் முகனும் , பிறை சந்திரனை 
அணிந்த தலையை  உடைய நின் கணவனான சிவனும் ,திருமாலும் 
வணங்கி எபோதும் துதிக்கின்ற சிவந்த திருவடிகளை உடையவளே ,
செந்நிற திலகம் அணிந்த நெற்றியை உடையவளே !

தயிரில் சுழல்கின்ற மத்தினை போல் , பிறப்பு இறப்பு இடையே 
சுழலும் என் உயிர் , தளராத படி ஒரு நல்ல கதியை அடையுமாறு 
நீ.... திருஉள்ளம் கொள்ள வேண்டும் !.