Saturday 30 April 2011

ஆறாம் பாடல்

சென்னியது உன்பொன் திருவடி தாமரை சிந்தையுள்ளே !

மன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே!

முன்னிய நின்னடி யாருடன் கூடி முறைமுறையே !

பன்னிய தென்று முன் தன்பரமாகம பத்ததியே !

பொருள் 

செந்நிறமான திருமேனி உடைய பெருமாட்டியே ! அடியேனின் தலை மீது  பொருந்தி இருப்பது நின் அழகிய திருவடி தாமரை மலர் !
என மனதுள் பொருந்தி இருப்பது உன் தெய்வ தன்மை பொருந்திய மந்திரம் 
உன்னையே தியானம் செய்து வாழும் அடியாருடன் !
ஒன்று கூடி முறை முறையாக பாராயணம் செய்பவை நின் மேலான 
ஆகம நெறிகளாகும்!....

Friday 29 April 2011

ஐந்தாம் பாடல்.....


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்!

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்!

அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்!

திருந்திய சுந்தரி யந்தரி பாதமென் சென்னியதே ! 

<பொருள் >
பொருந்திய திருபுறங்களின் தலைவி . செப்பாய் உவமையாக கூறும் 
இரு கொங்கைகளின் சுமையினாலே வருந்திய வஞ்சி கொடி போன்ற 
இடையை உடைய மனோன்மணி . நீண்ட சடையை உடைய 
சிவபெருமான் முன்காலத்தே அருந்திய நஞ்சினை கழுத்தில் 
நிறுத்தி அமுதம் ஆக்கிய அன்னை . தாமரை மலர் மீது 
வீற்று இருக்கின்ற பேரழகி , பிரகாச வடிவுடையாள் 
ஆன அபிராமி அம்மையின் திருவடிகள் என் மீது உள்ளனவாகும் !



Thursday 28 April 2011

நான்காம் பாடல் ......

மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னி!

குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார்சடை மேல்!

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரிதியும் படைத்த!

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே !

பொருள் 

மனிதர் தேவர் இறவாத ஸ்ரிஞ்சீவி தன்மையுடைய முனிவர்கள் 
நெருங்கி வந்து தலை வணங்கும் சிவந்த அடிகளை உடைய 
கோமள வல்லியே ! கொன்றை மாலை சூடிய நீண்ட ஜடை மீது 
குளிர்ந்த இளம்பிறை சந்திரனும் , பாம்பும் , கங்கையும் ,
ஆகிய வற்றை அணிந்த தூயவரான சிவா பெருமானும் 
நீயும் . என் மனதுள் வந்து தங்கி அருள்வீராக !

Tuesday 26 April 2011

மூன்றாம் பாடல்....

அறிந்தேன் எவரும் அறிய மறையை அறிந்து கொண்டு .

செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப.
 
பிறிந்தேன் என் அன்பர் பெருமை என்னாத கரும நெஞ்சால் .

மறிந்தே விழு நர குக்குற வாய மனிதரையே !

பொருள் 
திரு மகளாய் விளங்குபவளே ! வேறு எவரும் அறியாத ரகசியத்தை 
நான் அறிந்து கொண்டேன் . அங்ஙனம் நான் அறிந்து கொண்டு 
நின் திருவடியை அடைக்கலமாக நான் அடைந்தேன் .
நின் அடியாரின் பெருமையை அறிந்து கொள்ளாத
தீவினை உடைய உள்ளம் காரணமாக நரகத்தில் விழும் ,
தொடர்புடைய மனிதரை கண்டு அஞ்சி விலகினேன் !

Monday 25 April 2011

பாடல் இரண்டு

துணையும் தொழு தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்!
 
பணையும் கொழுந்தும் பத்தி கொண்ட வெறும் பணிமலர்பூங்!
 
கணையும் கருப்புஞ் சிலையும் பாசாங்குசமும் கையில்!
 
அணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே !


திரிபுர சுந்தரி நான்கு கைகளிலும் குளிர்ந்த மலர் அம்புகளையும் 
கரும்பு வில்லையும் மென்மையான பாசம் அங்குசம் என்பனவற்றையும் 
கொண்டு விளங்குகிறாள் . அபெருமட்டியே எனக்கு துணையும் 
நான் வணங்கும் தெய்வமும் என்னை பெற்ற தாயும் 
வேதமான மரத்தின் கிளையாகவும் . அதன் தளிராகவும்
பொருந்திய வேராகவும் விளங்குகிறாள் . இதனை நான் அறிந்து கொண்டேன் !

Tuesday 12 April 2011

முதல் பாடல் ... செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இதை தினமும் சொல்ல நல்ல பலனாம் ........

உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம் உணர்வுடையோர்!
 மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை!
துதிக்கின்ற மின்கொடி மென்கடி குங்கும தோயம் என்ன !
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே !


தோன்றுகின்ற உதய சூரியன் .தலையின் உச்சியில் மங்கையர் வைத்து கொள்ளும் 
குங்கும திலகம் மனிதர்கள் மதித்து கொண்டாடும் மாணிக்கம் , மாதுளம் மலர் , தாமரை மலரில் வீற்றுருகின்ற திருமகள்  துதிக்கும் மின்னல் கோடி 
மென்மையான மனதை உடைய குங்கும கலவை நீர் என்று அடியார்கள் உவமையாக எடுத்து கூறும் 
திருமேனி உடைய அபிராமி அம்மை எனக்கு துணையாக இருப்பார் என்பது திண்ணம் ....... 
..

Wednesday 6 April 2011

காப்பு

தரமற் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை !
ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே உலேகேழும் பெற்ற !
சீர் அபிராமி அந்தாதி எபோதும் என் சிந்தையுள்ளே! 
காரமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே! 

<><>பொருள் <><>
மாலையாய் கட்ட பட்ட கொன்றையும் சண்பக மலர்மாலையும் 
அணிந்த தில்லையம்பதியில் உள்ள நடராசருக்கும் 
அவர் தம் இடப்பக்கத்தில் வீற்றிருக்கும் உமை அம்மையாருக்கும் 
தோன்றிய மைந்தனே !மேகம் போன்ற மேனியை உடைய 
கணபதியே ஏழ் உலகங்களையும் பெற்ற சிறந்த அபிராமி அம்மையாருக்கு 
அணியும் அந்தாதி எபோதும் என் மனதுள் பொருந்தி நிற்குமாறு அருளுவாயாக !!!!