Tuesday, 28 June 2011

இருபத்தி ஆறாம் பாடல் ~~~~~

ஏந்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் !

காத்தும்! அழித்தும் , திரிபவராம் கமழ் பூங்கடம்பு !

சாத்தும் குழலனங்கே மணநாறு நின்தாளிணைக்கே என் !

நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே !

<பொருள்>

நறுமணம் கமழும் கடம்ப நறுமண மலர்களை அணியும் கூந்தலையுடைய 
தெய்வ பெண்ணே ! நின்னை துதிக்கும் அடியவர் பதினான்கு படைத்தும்
காத்தும் அழித்தும் விளங்கும் மும்மூர்த்திகலாவர் . அங்ஙனமாக மணம்
வீசும் நின் இரண்டு திருவடிகளுக்கு எளியவனான என் நாவில் தங்கிய 
பொலிவற்ற சொற்கள் ஏற்படுயதாக செயல் சிரித்தற்கு இடமாய் உள்ளது !

Thursday, 23 June 2011

இருபத்தி ஐந்தாம் பாடல் ~~~~~

பின்னே திரிந்துன் அடியாரை பேணி பிறப்பறுக்க !

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதன் மூவருக்கும் !

அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே !

என்னே இனியுன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே !

<பொருள்>

முதற்கடவுளான மும்மூர்த்திகளுக்கும் அன்னையே !உலகத்து உயிர்களின் 
நன்மையின் பொருட்டு அபிராமி எனப் போற்ற பெறுகின்ற அருமருந்தாய் 
விளங்குபவளே !உன்னை நான் மறவாமல் என்றும் துதிப்பேன் !
இனிமேல் எனக்கு என்ன கவலை ? இத்தகைய பேரு எனக்கு வாய்த்ததிற்கான காரணம் யாது ? நின்னடியாரின் பின்னால் திரிந்து 
அவர்களை போற்றி பிறப்பை அறுப்பதற்கு தக்கபடி முன் பிறவியில் 
தவத்தை ஆற்றி உள்ளேன்!......இருபத்தி நான்காம் பாடல் ~~~~~~

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த !
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதாவர்க்கு !

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே !

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே !

<பொருள்>

மாணிக்கம் போன்றவளே ! மணியில் பொருந்திய ஒளி போன்றவளே !
விளங்கும் உயர்ந்த மணிகளால் இயற்ற பெற்ற அணி போன்றவளே !
அணிந்து கொள்ளும் அணிகளுக்கு அழகாக விளங்குபவளே !
நின்னை அணுகாதர்வற்கு நோய் போன்றவளே !பிறவி என்ற நோய்க்கு மருந்தாக விளங்குபவளே !தேவர்க்கு பெருவிருந்தாக விளங்குபவளே !
நின் தாமரை பாதங்களை வணங்கிய பின் வேறு ஒருவரையும் வணங்க மாட்டேன் !


Wednesday, 22 June 2011

இருபத்தி மூன்றாம் பாடல் ~~~~~

கொள்ளேன் மனதினில் கோலம் அல்லது என்பர் கூட்டந்தன்னை !

விள்ளேன் பராமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு !

குள்ளே அனைதினிர்க்கும் புறம்பே உள்ளதே விளைந்த!

கள்ளே களிக்கும் கலியே அளியே என் கண்மணியே !

<பொருள்> 

பரந்த மூவுலகங்களுக்கு உள்ளும் அந்தர்யாமியாய் உள்ள அன்னையே !
எல்லா உலகங்கங்களுக்கும் அப்பாற்பட்டு விளங்குபவளே !
உள்ளத்தில் இன்பத்தை விளைவிக்கும் கள்போன்றவளே !
அக்கள்ளால் களிக்கும் களிப்பை விளங்குபவளே !எளியவனான என் கண்ணில் உள்ள மணி போன்றவளே ! யான் நின்னையே அல்லாமல் 
வேறு உருவத்தை தியான பொருளாக மனதில் கொள்ள மாட்டேன் !உன் 
அன்பர்கள் கூட்டத்தை என்றும் பிரிந்து நில்லேன் .... பிற சமயங்களை விரும்ப மாட்டேன் !

கொடியே இளவஞ்சி கொம்பே எனக்கு வம்பேபழுத்த  !

படியே மறையின் பரிமளமே பனிமால் இமய !

பிடியே பிரமன் முதலாய தேவரைப்  பெற்ற அம்மே !

அடியேனி றந்து இங்கினிப் பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே!

<பொருள்>

பொன்கொடி போன்றவளே ! இளைய வஞ்சி கொம்பு போன்றவளே !
தகுதி இல்லாத எனக்கு தானே வந்து அருள் அளித்த கனியே !
வேதமான மலரில் பரவிய மணம் போல விளங்குபவளே !
பனியை உடைய பெரிய இமய மலையில் தோன்றிய பிடி போன்றவளே !
நான் முகன் முதலிய தேவரை பெற்றெடுத்த தாயே !அடியவன் இவ்வுலகத்தில் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே !

Tuesday, 21 June 2011

இருபத்தி ஒன்றாம் பாடல் ~~~~~~


மங்கலை செங்கலை சம்முலையால் மலை யால்வருண !

சங்கலை செங்கை சகல கலாமயில் தாவு கங்கை !

பொங்கலை தாங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்!

பிங்கலை நீலி செய்யாள் வெளி யால்பசும் பெண்கொடியே !

<பொருள்>
அபிராமி மங்கள் வடிவுடையவள் செம்மையான குடம் போன்ற கொங்கைகள் உடையவள் !மலையின் மகள் !பல வண்ணங்கள் உடைய வளையல் அணிந்தவள் ; எல்லா கலைகளுக்கும் தலைவியான மயில் போன்றவள் !
பாயும் கங்கையில் பெருகும் அலைகள் அமைதியாய் தூங்க புரிந்த ,
சடையுடைய சிவபெருமானின் ஒரு பக்கத்தை தனக்கே உரியதாய் கொண்டு 
ஆள்கின்ற உரிமை உடையவள் . பொன்னிறம் வாய்க்க பெற்றவள் 
நீல நிறம் உற்றவள் . வெண்மை நிறம் கொண்டவள் . பசுமையான கொடி போன்றவள் ...
Sunday, 19 June 2011

இருபதாம் பாடல்~~~~~

உறைகின்ற நின்திரு கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ !

அறைகின்ற நான் மறையின் அடியோ ! முடியோ ! அமுதம் !

நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ ! என்றன் நெஞ்சகமோ !

மறைகின்ற வாரிதியோ ! பூரணாசல மங்கலையே ! 

<பொருள்>

எங்கும் நிறைந்தவளையும் தளர்ச்சி அற்றவளாயும்  உள்ள மங்கலமான அபிராமியே ! நீ விற்று இருக்கின்ற நின் திருகோவிலில் நின் கணவர் 
சிவபெருமானின் இடபாகமோ ? உன்னை துதிக்கின்ற வேதங்களின் மூலமான பிரணவமோ ? அந்த வேதங்களின் உச்சியான 
உபநிடந்தன்களோ ? அமுதம் நிறைந்துள்ள வெண்மையான சந்திரனோ ?
தாமரை மலரோ ? என் உள்ளமோ ?அனைத்தும் மறைவதற்கான கடலோ ?
 பூரணம் நிறைந்த என் மங்கலையே .. உன்னை வணங்குகிறேன் !!!!


பத்தொன்பதா ம் பாடல்~~~~~

வெளிநின்ற நினதரு மேனியை பார்த்து என் விழியுநெஞ்சும் !

களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே !

தெளிநின்ற ந்ஜனம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ !

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பது மேனி உறைபவளே !

<பொருள்>
ஒளியுடைய ஒன்பது கோணங்களில் விற்று இருக்கின்ற  தாயே !
புறத்தில் யாவரும் எழுந்தருளிய நின் அழகிய கோலத்தை தரிசித்து 
என் கண்களும் மனமும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு கரைகாண முடியாது . ஆயினும் என் உள்ளத்தில் தெளிந்த ந்ஜனம் உள்ளது .
இன்னும் என்ன என்ன அனுபவத்தை வழங்கவேண்டும் 
என்பது நின் திருவுள்ளமோ ?


Friday, 17 June 2011

பதினெட்டாம் பாடல் ~~~~~

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்து இருக்கும் !

செவியும் உங்கள் திருமண கோலமும் சிந்தையுள்ளே !

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதம் ஆகிவந்து !

வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே !


<பொருள்>
அன்னையே !நீ கவர்ந்து கொண்ட இடபாகத்தை உடைய சிவபெருமானும் நீயும் கூடி மகிழ்து இருக்கும் நிலையில் உள்ள கோலமும் , உங்கள் திருமண கோலமும் , என் உள்ளத்தில் இருந்த அகந்தையை போக்கி என்ன உள்ளதை ஆண்ட உன் பொலிவுடைய  பொற்பாதம் எழுந்து வந்து 
கூற்றுவன் என்னை கவர வரும்போது அவன் காண வெளிவந்து நின்று ,
அவனால் வரும் துன்பத்தை போக்கி அருள வேண்டும் ! 

பதினேழாம் பாடல் ~~~~

அதிசய மான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் !

துதிசய வானன சுந்தர வள்ளி துணை இறுதி !

பதி சயமானது அபசய மாகமுன் பார்த்தவர்தம் !

மதிசய மாகவன்றோ வாம பாகத்தை வவ்வியதே !

<பொருள்>
அதிசயமான வடிவுடைய அபிராமி அம்மை , தாமரை மலர்கள் எல்லாம் துதிக்கும் , வெற்றி திருமுகமுடைய அழகு கொடியாவாள்,இரதியின் கணவனான காமன் பெற்ற வெற்றி தோல்வி அடையுமாறு, நெற்றி கண்ணால் சுட்டெரித்தவர் சிவபெருமான் . அத்தகையவரின் திருவுள்ளம் தன் வெற்றியாக மாற , அதனால் அன்றோ அம்மை ஆனவள் சிவனின் இடபாகம் பெற்றாள்.!

Tuesday, 7 June 2011

பதினாறாம் பாடல் ~~~~~

கிளியே கிளைஜர் மனத்தே கிடந்து கிளர்தொளிரும் !

ஒளியே ஒளிகிட மெண்ணில் ஒன்றுமில்லா! 

வெளியே வெளிமுதர் பூதங்களாகி விரிந்த அம்மே!

அளியேன் அறிவள விற்கு அளவானது அதிசயமே !

<பொருள்> 
கிளி போன்ற தாயே ! அடியவரின் மனதில் நிலை பெற்று விளங்கும் ஒளியே !உலகத்தில் விளங்கும் ஒலிகளுக்கெல்லாம் எல்லாம் ஆதாரமான பொருளே ! நினைத்து பார்க்கும் போது எந்த தத்துவமும் ஆகாமல் யாவற்றையும் கடந்து நின்ற பரவெளியே ! வான் முதலிய ஐம்பெரும் பூதங்களாய் விரிந்துள்ள தாயே !இத்துணை பெரியவளான நீ 
இந்த எளியேனின் சிற்றறிவின் அடங்கியது வியப்பே ஆகும் ! Friday, 3 June 2011

பதினைந்தாம் பாடல் ~~~~~

தண்ணளி கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வர்! 

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்மதி வானவர் தம் !

வின்னெளிக் செல்வமும் அழியாமுத்தி வீடும் அன்றோ !


பண்ணளிக்கும் சொற்பரிமல யாமளைப் பைங்கிளியே !

<பொருள்>
பண் போல பேசும் இனிய சொற்களும் சிறந்த நறுமணமும் உடைய 
ஷ்யாமளா தேவியான பசுங்கிளி போன்ற அன்னையே ! உன் குளிர்ந்த 
அருளை பெறுதற்காக முன் பிறவியில் பலகோடி தவங்களை செய்தவர்கள் 
இந்த உலகத்தை ஆள்கின்ற அரசுரிமை செல்வத்தை மட்டுமா பெறுவார்கள்?
அறிவை உடைய தேவர்களுக்குரிய இந்த்ர பதவியான செல்வத்தை 
பின் எக்காலத்தும் அழியாத முக்தியான வீட்டுல வாழ்கையும் பெறுவார்கள்