Saturday 30 July 2011

பாடல் முப்பத்து நான்கு ~~~~~~

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் !

தந்தே பரிவொடு தான்போ இருக்கும் சதுமுகமும் !

பைந்தேன் அலங்கல் பருமணி யாகமும் பாகமும்பொன் !

செந்தேன் மலரு மலர்கதிர் ஞ்சயிரும் திங்களுமே !

<பொருள்>
அபிராமி தன்னிடம் வந்து அடைக்கலம் அடையும் அடியவருக்கு 
பொன் உலகபதவியை அன்புடன் தருவாள் ,தந்து , தான் சென்று 
நான் முகனின் நான்கு முகங்களிலும் , மற்றும் பசிய தேன்சிந்தும் 
துளசிமாலை சூடிய கௌத்துவ மணி அணிந்த திருமாலின் மார்பிலும் 
சிவபெருமானின் இடபாகத்திலும் , செந்தேன் சிந்தும் தாமரை மலரிலும் 
பரந்த கதிரிகளையுடைய கதிரவனின் ஒலிகய்டையிலும் 
திங்களின் குளிர்ச்சியிலும் இருப்பாயாக ! 


பாடல் முப்பத்து மூன்று ~~~~~~

இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க !

அழைக்கும் பொழுது வந்து அஞ்சேல் என்பாய் அத்தர் சித்தமெல்லாம் !

குழைக்கும் களப குளிமுளையாமலை கோமளமே !

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே !

<பொருள்>
எம்பெருமானின் உள்ளமானதை உருக செய்யும் சந்தன கலவை பூச பெற்ற 
குவிந்த கொங்கைகளையுடைய யாமளை என்ற மென்மையானவளே !
விதித்த விதியின் படி கொள்ள வரும் எமன் எனை நடுங்க செய்து 
அழைக்கும் போது , நீ எழுந்தருளி , நீ அஞ்ச வேண்டா : என்று அருளுவாயாக ... நான் துன்பம் அடையும்போது வேறு எவரையும் நாடாமல் , தாயே ! என்று உன்னையே நாடி ஓடிவருகிறேன் !...